என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

சமூக வலைதளத்தில் பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு அவ்வபோது சர்ச்சைகளிலும் சிகிச்சை கொண்டு வருகிறார் நடிகை கஸ்தூரி. இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் அஜித்குமார் பற்றி டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், அஜித்னா யாரு? கேக்க மாட்டாங்களா. பின்னே  பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன், மருமகன் இப்படி எதுவுமே இல்லாமல், யாரும் தூக்கி விடாம, யாரையும் கெடுக்காமல், சொந்த முயற்சியில் மேல வந்தவரு. அவரை எல்லாம் எப்படி தெரியும் என்று பதிவிட்டு இருந்தார் கஸ்தூரி.
இதற்கு அதிகமான ரசிகர்கள் பலதரப்பட்ட கமெண்ட்களை கொடுத்தார்கள். அதில் ஒருவர், அக்கா நீங்கள் நாடாரே கிடையாது. சங்கி எப்படி நாடாராக இருக்க முடியும். அனைவரையும் சமமாக பார்க்கும் நாங்கள் தான் ஒரிஜினல் நாடார் என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதற்கு கஸ்தூரி பதிலளிக்கையில், ‛ஜாதி பார்க்கும்போதே உங்கள் சமத்துவம் தெரிகிறது. உழைப்பால் உயர்ந்த சமூகத்தில் நீங்களும் பிறந்ததற்கு பெருமை கொள்ளுங்கள். திராவிஷத்தை எதிர்த்த காமராஜர் வழி தோன்றல்கள் நாம். அதைவிட பெருமை உண்டா?' என்று பதில் கொடுத்து இருக்கிறார் கஸ்தூரி. அவரது இந்த பதிவுக்கு அதிகப்படியான கமெண்ட்களும் லைக்குகளும் கிடைத்து வருகிறது.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            