சீரியல் இயக்குனரான திருசெல்வம் 'எதிர்நீச்சல்' தொடரை இயக்கி வருகிறார். நீண்ட நாள் கழித்து மீண்டும் தரமான சீரியலை எடுத்து வரும் அவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், மெட்டி ஒலி சீரியல் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருசெல்வம், ‛நான் மெட்டி ஒலி சீரியலில் நடித்தது எதிர்பாராதது தான். நான் நடிக்கவில்லை என்று சொல்லியும் திருமுருகன் தான் என்னை நடிக்க வைத்தார். இப்போது மெட்டி ஒலி-2 வரப்போவதாக சொல்கிறார்கள். எனக்கு சந்தோஷம் தான். ஆனால், இதுவரை என்னிடம் யாரும் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை' என்று கூறியுள்ளார்.