ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது காதலித்தார்கள். இதை பாவனி மறுத்து வந்த போதும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவரும் காதலை உறுதிப்படுத்தினார். இதன் காரணமாக அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கேள்விகள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த நேரத்தில் தன்னுடைய சோசியல் மீடியாவில், நான் சிங்கிள் தான் என்று பாவனி ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார்.
அதன் காரணமாக அமீரும், பாவனியும் பிரேக் அப் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி தீயாகப் பரவியது. இந்நிலையில் அவர்கள் இருவரும் அதுகுறித்து மீடியாக்களிடத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார்கள். அதில், எங்களை பற்றி வெளியாகி வரும் பிரேக்கப் செய்தி உண்மை இல்லை. யாரோ வேண்டுமென்றே இப்படி ஒரு வதந்தியை பரப்பி விட்டுள்ளார்கள். என்று அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.