‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளரான டிடி என்கிற திவ்யதர்ஷினி எப்போதுமே ரசிகர்களின் பேவரைட் வீஜேவாக இருந்து வருகிறார். தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் சின்னத்திரையில் முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே தோன்றி வருகிறார். இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த ஒரு பேட்டியில் தன்னை பற்றிய பல சர்ச்சையான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அந்தவகையில் டிடிக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, '16 வயதில் கிளப்பில் நடக்கும் ஒரு பார்ட்டிக்கு செல்ல அம்மாவிடம் அனுமதி கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். அதன்பின் அப்பாவிடம் கேட்டேன். அவர் போய்ட்டு வர அனுமதித்தார். ஏனென்றால் அவருக்கு நன்றாக தெரியும் நான் குடிக்க மாட்டேன் என்று. 16 வயதில் மட்டுமல்ல, இப்போது கூட என்னை சுற்றி குடிக்கும் நண்பர்கள் இருந்தாலும் நான் குடிக்கவே மாட்டேன்' என்று கூறியுள்ளார்.