பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பிறப்பு முதல் இறப்பு வரை இசை ஒன்றையே மூச்சுக் காற்றாய் சுவாசித்து, இன்றும் காற்றினில் கீதமாய் நம்மில் கலந்திருப்பவர்தான் 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மி. இசையுலகால் அரவணைக்கப்பட்டு, வெள்ளித்திரையின் வெளிச்சம் கண்டு இவர் நட்சத்திரமாய் மின்ன காரணமாய் அமைந்த திரைப்படம்தான் “ஸேவாஸதனம்”. வக்கீல் தொழிலை விட்டு விட்டு, கலையுலகில் கால் பதித்து, சினிமா என்ற சிங்காரக் கோட்டையில் புகழ் பெற்று விளங்கியவர் இயக்குநர் கே சுப்ரமணியம்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் வெகு விமரிசையாக கொண்டாடி வரும் 'மகாமகம்' திருவிழாவின் கலைநிகழ்ச்சிகள் அமைப்பாளராகவும் இருந்து வந்த இயக்குநர் கே சுப்ரமணியத்திடம் நடிகையும், அவரது வாழ்க்கைத் துணையுமான நடிகை எஸ் டி சுப்புலக்ஷ்மி, ஒரு இளம் பாடகியை இயக்குநர் கே சுப்ரமணியத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். அந்த இளம் பாடகியை கும்பகோணம் 'மகாமகம்' பொருட்காட்சியின் கலைநிகழ்ச்சியில் பாடவும் வைத்தார் இயக்குநர் கே சுப்ரமணியம்.
அந்த இளம் பாடகியின் குரல் கேட்டு, மக்களோடு இணைந்து இயக்குநர் கே சுப்ரமணியமும் கிரங்கித்தான் போனார். மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இரண்டாவது முறையாக அதே நிகழ்ச்சியை வேறு ஒரு நாள் நடத்த வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. கேட்போரைத் தன் இசையால், தன் குரலினிமையால் மயங்கச் செய்த அந்த இளம் பாடகிதான் 'இசையரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மி.
பிரேம்சந்த் என்பவர் எழுதிய ஒரு நாவலை, பிரபல சமூக சேவகியான அம்புஜம் அம்மாள் தமிழில் மொழி பெயர்த்து எழுதி வர, அது ஒரு வார இதழில் தொடர்கதையாகவும் வந்து கொண்டிருக்க, அந்தக் கதையை சினிமாவாக எடுக்க இயக்குநர் கே சுப்ரமணியம் ஆசை கொண்டார். உடனே நான்காயிரம் ரூபாய் கொடுத்து, அதை திரைப்படமாக்கும் உரிமையையும் பெற்றார். அந்நாளில் கதைக்காகக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இது என்று ஒரு செவிவழிச் செய்தியும் உண்டு.
கும்பகோணம் 'மகாமகம்' பொருட்காட்சியில் பாடி, தனது குரலினிமையால் பலரது இதயங்களைக் கவர்ந்த எம் எஸ் சுப்புலக்ஷ்மி அவர்களை அந்தக் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார் இயக்குநர் கே சுப்ரமணியம். அந்தப்படம்தான் “ஸேவாஸதனம்”. சமூக பிரச்னைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், அமெச்சூர் நாடக நடிகரான எப் ஜி நடேசய்யர் வயதான முதியவராகவும், வாழ்வின் தவிர்க்க முடியாத நிர்பந்தங்களால் அவருக்கு இரண்டாம் தாரமாக வந்து சேரும் இளம் பெண் கதாபாத்திரத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மியும் நடித்திருந்த “ஸேவாஸதனம்” திரைப்படம் 1938ம் ஆண்டு மே மாதம் திரைக்கு வந்தது.