பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'உத்தமப்புத்திரன்' படத்தில் 'ஹா... யாரடி நீ மோகினி' , மாலையிட்ட மங்கை' படத்தில் 'நானன்றி யார் வருவார்', 'ராஜராஜனில்', 'நிலவோடு வான்முகில் விளையாடுதே', 'நான் பெற்ற செல்வ'த்தில் 'மாதா பிதா குரு தெய்வம்', 'தூக்குத் தூக்கி'யில் 'சுந்தரி செளந்தரி நிரந்தரியே' இந்த பாடல்களை யார் பாடியது என்று கேட்டால் 90 சதவிகிதம் பேர் பி.சுசீலா என்பார்கள், அல்லது வேறு பாடகியின் பெயரை சொல்வார்கள். பத்து சதவிகிதம் பேருக்குத்தான் பாடியது ஏ.பி.கோமளா என்பது தெரியும்.
1940களின் இறுதியில் ஆரம்பித்து 1970வரை கோமளாவின் குரல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னந்திய மொழிகளில் ஒலித்தது. தனது 11 வது வயதில் திரைப்படங்களுக்கு பின்னணி பாட ஆரம்பித்தார். குழந்தை நட்சத்திரங்களுக்கு பின்னணி பாடி வந்த கோமளாவிற்கு 1949ம் ஆண்டு வெளியான 'வேலைக்காரி' படத்தில் இடம்பெற்ற, 'உலகம் பலவிதம்' பாடல் தான் அவரை பிரபலப்படுத்தியது. அதை பாடியபோது கோமளாவின் வயது 13. இந்தப் பாடலின் பிரபலம் கோமளாவையும் சிறந்த பின்னணிப் பாடகி வரிசையில் சேர்த்தது.