பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

கடந்த 2016ம் ஆண்டு சந்தானம் நடித்து வெற்றி பெற்ற படம் தில்லுக்கு துட்டு. அதன் பிறகு 2019ம் ஆண்டு வெளியான அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றது. பின்னர் 2023ல் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் என்ற படத்தில் சந்தானம் நடித்தார். அதையடுத்து மீண்டும் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படத்தில் நடித்து வந்தார் சந்தானம்.
இப்படத்தில் அவருடன் கவுதம் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், கீர்த்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகின்ற மே 16ம் தேதி அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதனிடையே படத்தின் டிரைலர் நாளை ஏப்ரல் 30ம் தேதி அன்று, காலை 11மணியளவில் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.