Advertisement

சிறப்புச்செய்திகள்

நடன மங்கை, நாயகி, நடுங்க செய்த வில்லி : நடிகை சிஐடி சகுந்தலாவின் வாழ்க்கை பயணம் | தெலுங்கு பிலிம் சேம்பர் விசாரணையில் நடன இயக்குனர் ஜானி | இயக்குனர் திரிவிக்ரமை கேள்வி கேட்பார்களா ? - நடிகை பூனம் கவுர் | இதுவா ஆர்த்தோடெக்ஸ்? ஷிவானியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் | 'சிங்கிளாக இருப்பது போர் ': விவாகரத்தை கொண்டாடிய ஷாலு புலம்பல் | சென்னையில் அவசர அவசரமாக நடந்த 'தேவரா' நிகழ்ச்சி | ஜெயம் ரவியின் பிரிவு விவகாரம்; தவிப்பில் தயாரிப்பாளர்கள் | அண்ணன், தம்பியுடன் மீண்டும் கூட்டணியில் ஜிவி பிரகாஷ் | பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் | அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிட் படம் கொடுத்தும் பாலிவுட்டில் படம் இயக்க விரும்பாத சித்திக்

11 ஆக, 2023 - 01:05 IST
எழுத்தின் அளவு:
Siddique-did-not-want-to-direct-a-film-in-Bollywood-despite-giving-a-hit-film

மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சித்திக். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக மலையாளத்தில் திலீப், நயன்தாரா நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான பாடிகார்ட் திரைப்படம், தமிழில் விஜய் அசின் நடிப்பில் காவலன் என்கிற பெயரில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. தமிழிலும் இந்த படத்தை சித்திக்கே இயக்கியிருந்தார்.

மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளில் இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியில் சல்மான்கான் நடிப்பில் பாடிகார்ட் என்கிற பெயரிலேயே இந்த படத்தை இயக்கி அங்கேயும் வெற்றி பெற செய்தார் சித்திக். அந்த சமயத்திலேயே கிட்டத்தட்ட 250 கோடி இந்த படம் வசூலித்தது. இப்படி பாலிவுட்டில் தனது அறிமுகப்படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் தொடர்ந்து ஹிந்தியில் படம் இயக்குவதை தவிர்த்து விட்டார் சித்திக்.

அதற்கு காரணம் அவரது படங்களில் அடிப்படையான விஷயமே நகைச்சுவைதான். மலையாளத்திலிருந்து வேறு மொழிகளில் ரீமேக் செய்யும் போது நடைமுறை சிரமங்கள் நிறைய இருக்கிறது என்று கூறியுள்ள சித்திக், தமிழில் கூட என்னால் எளிதாக சமாளிக்க முடியும். ஆனால் ஹிந்தியில் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என்றால் ஒரு நல்ல கதாசிரியர் வேண்டும். அது மட்டுமல்ல மலையாள மொழிக்கு உரிய பல நகைச்சுவை காட்சிகளை இந்தியில் மாற்றி எடுத்தால் அவ்வளவாக எடுபடாது என்றும் அப்போது கூறியிருந்தார் சித்திக்.

பாடிகார்ட் படத்தை தெலுங்கிலும், கன்னடத்திலும் அவரையே இயக்கச் சொல்லி அழைப்பு வந்தபோது தமிழ், இந்தியில் இயக்கிய அளவிற்கு தன்னால் தெலுங்கிலும் கன்னடத்திலும் அந்த படத்தை இயக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார் சித்திக்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பெண்களுக்கான படம் ‛ஜவான்' : ஷாரூக்கான்பெண்களுக்கான படம் ‛ஜவான்' : ... ஷாரூக்கானுடன் இணைந்து நடனமாடிய அட்லி ஷாரூக்கானுடன் இணைந்து நடனமாடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in