இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
சினிமாவில் நடன மங்கையாக அறிமுகமாகி, பின்னர் நாயகி, வில்லி என சினிமா, சின்னத்திரை என அசத்தி வந்த நடிகை சிஐடி சகுந்தலா(84) வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் பெங்களூருவில் காலாமானார். அவரின் வாழ்க்கை பயணம் பற்றிய சிறு தொகுப்பு...
பயோடேட்டா
பெயர் : அ.சகுந்தலா
சினிமா பெயர் : சிஐடி சகுந்தலா
பிறப்பு : 03-மார்ச்-1947
இறப்பு : 17-செப்-2024
பிறந்த இடம் : அரிசிபாளையம், சேலம் மாவட்டம், தமிழ்நாடு
கணவர் : விஸ்வம்
குழந்தைகள் : செல்வி (மகள்)
பெற்றோர் : அருணாச்சலம் - ராஜம்மாள்
நடன ஆர்வம்
வெள்ளித்திரையில் அன்றிலிருந்து இன்று வரை கவர்ச்சி நடிகைகளுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அந்த வகையில் நடிகை சிஐடி சகுந்தலாவிற்கு மிகக் குறிப்பிடும்படியான ஒரு இடம் எப்போதும் உண்டு. தமிழ் நாட்டிலுள்ள சேலத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது ஆரம்பக் கல்வியை சேலத்திலும், பின்னர் உயர் கல்வியை திருச்சியிலும் பயின்றார். இயல்பிலேயே நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், சிறு வயதிலேயே பாரம்பரிய நடனங்களை முறையாக கற்றுக் கொண்டார்.
முதல் அறிமுகம்
பின்னர் லலிதா, பத்மினி, ராகினி குழுவில் இணைந்தும் நடனமாடி வந்தார். சினிமாவிற்கு ஏற்ற முகத்தோற்றமும், நடனத் திறமையும் கொண்டிருந்த நடிகை சிஐடி சகுந்தலாவை வெள்ளித்திரையும் வரவேற்றது. 1958ம் ஆண்டு இயக்குநர் டி.ஆர் ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி நடிப்பில் வெளிவந்த "காத்தவராயன்" என்ற திரைப்படத்தின் மூலம் நடன மங்கையாக முதன் முதலில் வெள்ளித்திரையின் களம் கண்டார் சகுந்தலா.
சிஐடி சகுந்தலாவாக மாற்றம்
இதனைத் தொடர்ந்து ஸ்ரீதரின் "கல்யாணப் பரிசு" திரைப்படத்தில் நடிகை சரோஜாதேவியின் தோழியாக, "கைதி கண்ணாயிரம்" திரைப்படத்தில் நடன மங்கையாக, "படிக்காத மேதை" திரைப்படத்தில் நடிகர் டிஆர் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக என எண்ணற்ற படங்களில் சிறு சிறு வேடங்களிலும், நடன மங்கையாகவும் நடித்து வந்த இவருக்கு, 1970ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆர்.சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த "சிஐடி சங்கர்" திரைப்படத்தின் மூலமாக முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதுவரை ஏ.சகுந்தலா என்றிருந்த இவரது பெயர், இந்த படத்தின் வெற்றிக்குப் பின் சிஐடி என்ற அடைமொழி இவரது பெயரோடு ஒட்டிக் கொண்டு சிஐடி சகுந்தலாவானார்.
நடிகர் ஜெய்சங்கருடன் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர், மீண்டும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "ஜஸ்டிஸ் விஸ்வநாதன்" திரைப்படத்தில் நடிகர் ரவிசந்திரனோடும் ஜோடி சேர்ந்தார். இறையருள் இயக்குநர் ஏபி நாகராஜனின் "திருமலை தென்குமரி" திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், இயக்குநர் ஏபி நாகராஜனின் ஆலோசனையின் பேரில் அவருடைய அடுத்த படமான "கண்காட்சி"யில் நடிகர் கள்ளபார்ட் நடராஜனுக்கு ஜோடியாக எதிர்மறை கதாபாத்திரம் ஏற்று அவரோடு பலவிதமான நடனங்கள் ஆடியும் நடித்திருந்தார்.
800 படங்கள்
இதன்பின் வந்த "சூரியகாந்தி" திரைப்படத்தில் நடிகர் சோவுடன் ஜோடி சேர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 70களில் வந்த பெரும்பாலான படங்களில் இவர் வில்லியாகவும், கவர்ச்சி நடன மங்கையாகவும் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தியிருந்தார். "தவப்புதல்வன்", "வசந்த மாளிகை", "இதயவீணை", "வீட்டுக்கு ஒரு பிள்ளை", "நீதி", "பொன்னூஞ்சல்", "எங்கள் தங்க ராஜா", "பாரதவிலாஸ்" போன்ற திரைப்படங்கள் 70களில் இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடும்படியானவை.
தொடர்ந்து வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த சிஐடி சகுந்தலா, ஒரு காலகட்டத்திற்குப் பின் சின்னத்திரையிலும் தோன்றி தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வந்தார். "குடும்பம்", "வாழ்க்கை", "அக்னிசாட்சி", "சொந்தம்", "பூவிலங்கு", "கஸ்தூரி" "சபீதா என்கிற சபாபதி", "கல்யாண பரிசு" மற்றும் "தமிழ் செல்வி" என ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பறைக்கே சென்று மிக நெருக்கமானார்.
நாடகம், சினிமா, தொலைக்காட்சி என அனைத்து தளங்களிலும் தனது கலைப்பணியை திறம்பட செய்து வரும் நடிகை சிஐடி சகுந்தலா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 800 படங்கள் வரை நடித்திருக்கின்றார்.
சிவாஜி டூ விஜய் வரை நடிப்பு
தமிழில் எம்ஜ ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரவிசந்திரன், முத்துராமன், ஏவிஎம் ராஜன், தெலுங்கில் ஏ.நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சோபன் பாபு, கன்னடத்தில் ராஜ்குமார், கல்யாண் குமார், மலையாளத்தில் பிரேம் நஸீர், ஜெயன் என அனைத்து ஜாம்பவான் நடிகர்களோடும் இணைந்து நடித்த பெருமைக்குரியவரான நடிகை சிஐடி சகுந்தலா இன்றைய இளம் தலைமுறை நாயகரான நடிகர் விஜய்யுடனும் "வசந்த வாசல்" என்ற திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடதக்கது.
"வசந்த மாளிகை" திரைப்படத்தில் இடம் பெற்ற "குடி மகனே பெருங்குடி மகனே", "தவப்புதல்வன்" திரைப்படத்தில் இடம் பெற்ற "லவ் இஸ் பைன் டார்லிங்" என்று ஆரம்பமாகும் "நானொரு காதல் சன்யாசி", "சிஐடி சங்கர்" திரைப்படத்தில் இடம் பெற்ற "பிருந்தாவனத்தில் பூவெடுத்து", "பாரதவிலாஸ்" படத்தில் இடம் பெற்ற "மின்மினி பூச்சிகள் கண்களில் தென்படும்" போன்ற பாடல்கள் என்றும் நடிகை சிஐடி சகுந்தலாவை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதே உண்மை.
சிஐடி சகுந்தலா நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்
1. காத்தவராயன் - டான்ஸர்
2. கல்யாணப் பரிசு - துணை நடிகை
3. கைதி கண்ணாயிரம் - டான்ஸர்
4. படிக்காத மேதை - துணை நடிகை
5. போலீஸ்காரன் மகள் - துணை நடிகை
6. கை கொடுத்த தெய்வம் - டான்ஸர்
7. கார்த்திகை தீபம் - துணை நடிகை
8. அன்பே வா - துணை நடிகை
9. நினைவில் நின்றவள் - துணை நடிகை
10. ஒளி விளக்கு - டான்ஸர்
11. திருடன் - டான்ஸர்
12. என் அண்ணன் - துணை நடிகை
13. சி ஐ டி சங்கர் - கதாநாயகி
14. திருமலை தென்குமரி - துணை நடிகை
15. கண்காட்சி - எதிர்மறை கதாபாத்திரம்
16. தரிசனம் - துணை நடிகை
17. கல்யாண ஊர்வலம் - துணை நடிகை
18. ஜஸ்டிஸ் விஸ்வநாதன் - கதாநாயகி
19. வீட்டுக்கு ஒரு பிள்ளை - துணை நடிகை
20. புதிய வாழ்க்கை - துணை நடிகை
21. புன்னகை - துணை நடிகை
22. வசந்த மாளிகை - டான்ஸர்
23. அகத்தியர் - துணை நடிகை
24. இதயவீணை - துணை நடிகை
25. கருந்தேள் கண்ணாயிரம் - துணை நடிகை
26. தவப்புதல்வன் - துணை நடிகை
27. நீதி - டான்ஸர்
28. கொன்னூஞ்சல் - டான்ஸர்
29. சூரியகாந்தி - துணை நடிகை
30. இராஜ ராஜ சோழன் - டான்ஸர்
31. மஞ்சள் குங்குமம் - துணை நடிகை
32. தெய்வக் குழந்தைகள் - துணை நடிகை
33. தேடி வந்த லக்ஷ்மி - துணை நடிகை
34. கட்டிலா தொட்டிலா - துணை நடிகை
35. எங்கள் தங்க ராஜா - துணை நடிகை
36. பாக்தாத் பேரழகி - துணை நடிகை
37. பாரதவிலாஸ் - துணை நடிகை
38. தாய் - துணை நடிகை
39. தாய் பிறந்தாள் - துணை நடிகை
40. ரோஷக்காரி - துணை நடிகை
41. பணத்துக்காக - துணை நடிகை
42. அன்பைத் தேடி - துணை நடிகை
43. அன்புத் தங்கை - துணை நடிகை
44. தென்னங்கீற்று - துணை நடிகை
45. சினிமா பைத்தியம் - துணை நடிகை
46. ஆயிரத்தில் ஒருத்தி - துணை நடிகை
47. யாருக்கு மாப்பிள்ளை யாரோ - துணை நடிகை
48. வைர நெஞ்சம் - துணை நடிகை
49. கிரஹப்பிரவேசம் - துணை நடிகை
50. காலங்களில் அவள் வசந்தம் - துணை நடிகை
51. வரப்பிரசாதம் - துணை நடிகை
52. உண்மையே உன் விலை என்ன? - துணை நடிகை
53. ரோஜாவின் ராஜா - துணை நடிகை
54. ஸ்ரீகிருஷ்ண லீலா - துணை நடிகை
55. அவன் ஒரு சரித்திரம் - டான்ஸர்
56. அதிர்ஷ்டக்காரன் - துணை நடிகை
57. அந்தமான் காதலி - துணை நடிகை
58. மாங்குடி மைனர் - துணை நடிகை
59. ஜஸ்டிஸ் கோபிநாத் - துணை நடிகை
60. நாடகமே உலகம் - துணை நடிகை
61. நான் வாழவைப்பேன் - துணை நடிகை
62. இமயம் - துணை நடிகை
63. வண்டிச்சக்கரம் - துணை நடிகை
64. கீழ்வானம் சிவக்கும் - துணை நடிகை
65. தெய்வப்பிறவி - துணை நடிகை
66. உழவன் மகன் - துணை நடிகை
67. வேலைக்காரன் - துணை நடிகை
68. புதியராகம் - துணை நடிகை
69. வசந்த வாசல் - துணை நடிகை
70. அந்தநாள் - துணை நடிகை
71. நேதாஜி - துணை நடிகை
72. பொன்மானைத் தேடி - துணை நடிகை