இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடன இயக்குனர் ஜானி மீதான பாலியல் குற்றச்சாட்டு. 21 வயதே ஆன நடனப் பெண் ஒருவர் கொடுத்த புகார் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்த அவரை கட்சியிலிருந்தும் உடனடியாக நீக்கினார்கள்.
இந்நிலையில் தெலுங்கு பிலிம் சேம்பர் தற்போது ஜானி மீதான விசாரணையைத் துவக்கியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பே அதாவது 2019ம் ஆண்டிலிருந்தே அந்தப் பெண் நடனக் குழுவில் இடம் பெற்று வந்துள்ளார். ஒரு மைனர் பெண்ணை எப்படி நடனக்குழுவில் ஜானி சேர்த்தார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்களாம். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிட்டி விசாரணையை நடத்தி வருகிறது என்றும் பிலிம் சேம்பர் அறிவித்துள்ளது.
தற்போது தெலுங்கு சினிமா மற்றும் டிவி டான்சர் மற்றும் டான்ஸ் டைரக்டர்ஸ் அசோசியேஷன் தலைவராக உள்ள ஜானியின் தலைவர் பதவியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும் அந்த சங்கத்தினரை தெலுங்கு பிலிம் சேம்பர் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், திரைத் துறையைச் சேர்ந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் அளிக்க தனியாக புகார் பெட்டி ஒன்றை சேம்பர் அலுவலக வாயிலில் வைத்துள்ளோம். அதில் புகார் அளிக்கலாம் என்றும், அவர்களது புகார் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சேம்பர் சார்பா அதன் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.