நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பாலிவுட்டின் பிரபலமான குடும்பம் அமிதாப்பச்சன் உடையது. அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பற்றி அடிக்கடி திருமணப் பிரிவு சர்ச்சை எழுவது வாடிக்கையாகிவிட்டது.
சில தினங்களுக்கு முன்பு விருது விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது மகள் ஆராத்யாவுடன் துபாய் சென்றார் ஐஸ்வர்யா ராய். அப்போது அவர்களை வழக்கம் போல பல புகைப்படக்காரர்கள் படமெடுத்தனர். அந்தப் படங்களில் ஐஸ்வர்யாவின் விரலில் அவரது திருமண மோதிரம் இல்லாமல் இருப்பதை கவனித்து தற்போது சர்ச்சையாக்கி உள்ளனர். எப்போதுமே திருமண மோதிரத்தை அணிந்திருக்கும் ஐஸ்வர்யா இப்போது அணியவில்லையே ஏன் என்றும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
துபாயில் நடந்த விருது வழங்கும் விழாவில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது வழங்கப்பட்டது. அம்மா ஐஸ்வர்யா விருது வாங்கியதை மகள் ஆராத்யா மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் இடம் பெற்றுள்ளது. இப்படி ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை தொடர்ந்து பிரிவு, விவாகரத்து என பேசி வருகிறார்கள்.