பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் |
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அவருக்கென ஒரு நல்ல பெயரும், ஸ்டடியான சினிமா வாழ்க்கையும் இருந்து வருகிறது. ஆனால், கடந்த பத்து நாட்களாக அவரது மனைவி ஆர்த்தியுடனான அவரது பிரிவு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றவர்கள் இத்தனை வருடங்களுக்குப் பிறகு பிரிவது சரியா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தங்களது பிரிவு பற்றி இருவரும் தனித்தனியாக அறிக்கை விட்டாலும் சமூக வலைத்தளங்களிலும், யு டியூப் தளங்களிலும் தொடர்ந்து அவர்களது பிரிவு பற்றி பேசப்பட்டு வருகிறது. இருவரையும் சேர்த்து வைக்க அவர்களது குடும்பத்தினரும், நண்பர்களும் முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, கடந்த வாரம் செப்டம்பர் 10ம் தேதி ஜெயம் ரவியின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக தனது பிரிவு பற்றிய அறிவிப்பை அறிக்கை மூலம் வெளியிட்டார் ஜெயம் ரவி. 10ம் தேதியன்று ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் படங்களான 'பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை,' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து சிறப்பு போஸ்டர்களையும் வெளியிட்டார்கள்.
ஜெயம் ரவியின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது இமேஜை அசைத்துப் பார்த்துவிட்டது. அவர் நடித்து அடுத்தடுத்து மேலே குறிப்பிட்ட மூன்று படங்கள் வெளியாக உள்ளன. இங்கு சினிமாவையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்காத ரசிகர்கள்தான் அதிகம். எனவே, ஜெயம் ரவியின் பிரிவு குறித்த சர்ச்சை எங்கே தங்களது படங்களைப் பாதித்துவிடுமோ என அவர் நடித்து அடுத்து வெளியாக உள்ள படங்களின் தயாரிப்பாளர்கள் தவிப்பில் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயம் ரவி கடைசியாக தனி கதாநாயகனாக நடிக்க, அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் வெளிவந்த 'சைரன்' படம் படுதோல்வி அடைந்தது. அப்படியிருக்க அடுத்து வெளியாக உள்ள அவரது படங்களின் வியாபாரமும் எதிர்பார்த்தபடி நடக்குமா என்பதும் சந்தேகம்தான்.