திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தமிழ் சினிமாவில் உள்ள அண்ணன், தம்பி கலைஞர்களில் முக்கியமானவர்கள் செல்வராகவன், தனுஷ். தற்போது இருவருமே இயக்கம், நடிப்பு என மாறி மாறி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்குனராக வந்த செல்வராகவன் நடிகராகவும் மாறிவிட்டார். நடிகராக வந்த தனுஷ் இயக்குனராகவும் மாறிவிட்டார்.
'ப பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள 'தனுஷ் 52'வது படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் தற்போது இயக்கி வரும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்கும் இசை ஜிவி பிரகாஷ் தான்'.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் மூலம் தான் திரையுலகத்தில் ரசிகர்களின் வரவேற்பை ஆரம்ப காலத்தில் பெற்றார் தனுஷ். 'துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை,' ஆகிய படங்கள் அந்தக் காலகட்டத்தில் குறிப்பிட வேண்டிய படங்கள். ஆனால், தான் இயக்கிய படங்களில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணையவில்லை தனுஷ். 'ப பாண்டி' படத்திற்கு இசை ஷான் ரோல்டன், 'ராயன்' படத்திற்கு இசை ஏஆர் ரகுமான்.
அது போலவே செல்வராகவன், யுவன் கூட்டணி அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு கூட்டணி. “காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை' ஆகிய படங்கள் அவர்கள் கூட்டணியின் முக்கிய படங்கள். இருவரும் கடைசியாக இணைந்த 'என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன்' ஆகியவை வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.இருந்தாலும் '7 ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் செல்வா, யுவன் கூட்டணி இணைந்துள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன், ஜிவி பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதைப் பற்றி ஜிவி பதிவிட்டிருந்தார். 'ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன' படங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளார்கள்.
ஒரே சமயத்தில் அண்ணன் செல்வராகவன், தம்பி தனுஷ் ஆகியோர் இயக்கும் படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பது ஒரு ஸ்பெஷல்.