மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் அட்லி இயக்கி உள்ள ஹிந்தி படம் ஜவான். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்காக அனிருத் இசையமைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பாடிய, வந்த இடம் என தொடங்கும் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த பாடலின் மேக்கிங் வீடியோவை ஜவான் படக்குழு வெளியிட்டுள்ளது. சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து படமாக்கப்பட்ட இந்த பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலில் ஷாருக்கானுடன் இணைந்து அட்லியும் நடனமாடி இருக்கிறார். இதற்கு முன்பு விஜய் நடித்த பிகில் படத்தில் சிங்க பெண்ணே பாடலில் சிறிது நேரம் விஜய்யுடன் நடனமாடி இருந்த அட்லி , தற்போது ஜவான் படத்தின் பாடலில் ஷாரூக்கான் உடனும் நடனமாடி இருக்கிறார். இந்த மேக்கிங் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.