'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட்டில் அட்லி இயக்கி உள்ள ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். செப்டம்பர் ஏழாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், அதையடுத்து அனிருத் இசையில் உருவான ஓப்பனிங் பாடலையும் வெளியிட்டார்கள். தற்போது ஜவான் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இயக்குனர் அட்லி சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார். அந்த போஸ்டரில், விஜய் சேதுபதி இளமை மற்றும் வயதான கெட்டப்பிலும் இருக்கிறார். இப்படத்தின் டிரைலரில் இளமையான தோற்றத்தில் இருந்த விஜய் சேதுபதி போஸ்டரில் வயதான கெட்டப்பிலும் இருப்பதால், ஒருவேளை விஜய் சேதுபதியும் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளாரோ என்ற யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.