மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
பாலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் இவர்தான். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் தற்போது ஹிந்தியில் உருவாகி உள்ள ஹத்தி என்கிற படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் நவாசுதீன் சித்திக்கின் கதாபாத்திர பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் நவாசுதீன் சித்திக் அமர்ந்திருக்கும் தோரணையை பார்க்கும் போது இந்த படத்தில் இவர்தான் வில்லன் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இதற்கு முன்னதாக இதேபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் 20 வருடங்களுக்கு முன்பு அப்பு என்கிற படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹத்தி திரைப்படத்தை புதியவரான அக்சத் அஜய் சர்வா என்பவர் இயக்கியுள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படம் தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.