''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
இயக்குனர் வெங்கட் பிரபுவின் 'பிளாக் டிக்கெட்' நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஐஸ்வர்யா தற்போது தனியாக 'மசாலா பாப்பார்ன்' என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளார். ஒயிட் பெதர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரித்துள்ள படம் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'. 'மீசைய முறுக்கு' படத்தில் அறிமுகமான ஆனந்த் இயக்கி, நடித்துள்ளார். அவருடன் பவானி ஸ்ரீ, இர்பான், குமரவேல், ஆர்ஜே விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து இயக்குனர் ஆனந்த் கூறியதாவது: படம் சென்னையின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டு இருந்தாலும் இதன் பெரும்பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் வாழ்க்கையையும் நட்பையும் கொண்டாடும் வகையில் உணர்வுப்பூர்வமாக வந்துள்ளது. என்றார்.
படத்தை வெளியிடும் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாவது: ‛சென்னை 28' படத்தின் நினைவுகளுக்கு என்னை அழைத்து சென்ற இந்தப் படத்தை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. சிறந்த கனவுகளுடன், இந்த அற்புதமான சினிமாவில் முத்திரை பதிக்க கடுமையாக முயற்சிக்கும் இந்த இளம் திறமைகளை பார்க்கும் போது எங்களையே மீண்டும் பார்ப்பது போல உள்ளது. இந்த படம் ரசிகர்களின் நண்பர்களைப் பற்றிய கதையாகவோ அல்லது உங்களைப் பற்றியதாகக் கூட இருக்கலாம். விரைவில் நாங்கள் அதை உங்களிடம் கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாட்களை மீட்டுத் தருவோம். நண்பர்களுக்காக நண்பர்கள் சேர்ந்து செய்த படம் இது. என்கிறார் வெங்கட் பிரபு.