''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சாதனைக்காக அவ்வப்போது வித்தியாசமாக படம் எடுப்பார்கள். ஒருவர் மட்டுமே நடிக்கும் படம், ஒரே ஷாட்டில் எடுக்கும். 24 மணி நேரத்தில் எடுத்த படம் என்று நிறைய சாதனை படங்களை எடுப்பார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறது 'ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டுடா' என்கிற படம். இதனை ஜி.சிவா என்பவர் இயக்கி, நடித்திருக்கிறார்.
ஓகி ரெட்டி சிவக்குமார் மற்றும் அருண் சுசில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணி சேகரன் செல்வா இசையமைத்திருக்கிறார். அர்த்தநாரீஸ்வரா மீடியா ஒர்க்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாலா ஞானசுந்தரம் தயாரித்திருக்கிறார். வருகிற 25ம் தேதி படம் தியேட்டரில் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர், நடிகர் ஜி.சிவா கூறியதாவது : ஒரே ஒரு நடிகர் நடித்த திரைப்படம் ஏற்கனவே நிறைய வந்துள்ளது. ஆனால் முழுக்க முழுக்க கமர்சியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் திரைக்கதையை ஒரே கதாபாத்திரத்தின் கோணத்தில் சொல்ல விரும்பினேன். 20 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரூ ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். காதல் பாடல் ஒன்றும், சோகப்பாடல் ஒன்றும் என இரண்டு பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது.
ஒரே ஒரு நடிகர் நடித்திருந்தாலும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடியான சண்டைக் காட்சிகளையும் திரைக்கதையில் இடம் பெற வைத்திருக்கிறோம். சண்டைக் காட்சிகளில் என்னை தவிர யாருமே திரையில் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.
இதுபோன்று நிறைய வித்தியாசமான படங்களை இயக்க விரும்புகிறேன். இந்தத் திரைப்படத்தை கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருக்கிறோம். அவர்கள் கேட்ட தகவல்களையும், காணொளிகளையும் அனுப்பி இருக்கிறோம். விரைவில் சாதகமான பதில் வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றார்.