ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் சித்திக். 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்', விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா', பிரசன்னா நடித்த 'சாது மிரண்டால்', விஜய் நடித்த 'காவலன்', கடைசியாக அரவிந்த்சாமி நடித்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இயக்கினார்.
69 வயதான சித்திக்கிற்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சி அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆபத்தான நிலையில் அவசர பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. உயிர்காக்கும் கருவிகள் உதவியால் அவர் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.