சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
செய்தியின் தலைப்பையும், அருகில் உள்ள படத்தையும் பார்த்துவிட்டு என்னாது காயத்ரி ஹாலிவுட் படத்தில் நடிக்கிறாரா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். காயத்ரியை ஹாலிவுட் நடிகையாக நவீன ஏஐ தொழில்நுட்பத்தில் மாற்றி அவரது தீவிர ரசிகர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்து காயத்ரியே இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதனை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார்.
புகழ்பெற்ற ஹாலிவுட் படமான 'மேட் மேக்ஸ் : பியூரி ரோட்' படத்தில் நடித்த நடிகை சார்லீஸ் தெரன் நடிப்பும் தோற்றமும் உலக புகழ்பெற்றது. அந்த தோற்றத்திற்குத்தான் காயத்ரியை ரசிகர் மாற்றி இருக்கிறார். படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் தாராளமாக ஹாலிவுட் படத்தில் நடிக்கலாம் என்றும், மேட் மேக்சை படத்தை இந்தியாவில் ரீமேக் செய்தால் காயத்ரியை நடிக்க வையுங்கள் என்றும் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.