பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் | வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே |
சமுத்திரக்கனி இயக்கத்தில் தமிழில் ஓடிடி தளத்தில் வெளிவந்த 'வினோதய சித்தம்' படம் தெலுங்கில் 'ப்ரோ' என்ற பெயரில் ரீமேக் ஆகி கடந்த வாரம் வெளியானது. 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வரும் இப்படத்தில் ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சரான அம்பாட்டி ராம்பாபு என்பவரை கிண்டலடிக்கும் விதத்தில் ஷியாம் பாபு என்ற ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
தமிழில் படத்தை இயக்கிய சமுத்திரக்கனி தெலுங்கு 'ப்ரோ' படத்தை இயக்கியிருந்தாலும் திரைக்கதை, வசனத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் எழுதியிருந்தார். சினிமா, அரசியல் என இருக்கும் பவன் கல்யாண் படத்தில் கடவுள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் சில அரசியல் வசனங்களையும் த்ரிவிக்ரம் எழுதியிருந்தார்.
அம்பாட்டி ராம்பாபுவை சித்தரிப்பதாகச் சொல்லப்படும் ஷியாம் பாபு கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரான பிருத்வி நடித்திருந்தார். இவர் தமிழில் 'பாரிஜ் ஜெயராஜ், பீஸ்ட்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஆந்திர ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் சேர்ந்தவர்.
'ப்ரோ' படம் குறித்து அமைச்சர் அம்பாட்டி ராம்பாபு, “அவர்களுக்குத் தைரியும் இருந்தால் நேரடியாக அரசியல் படங்களை எடுக்கட்டும். ஏன் மறைமுகமாகத் தாக்க வேண்டும். ராம்பாபு என நேரடியாக எனது பெயரை வைக்க வேண்டியதுதானே. தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மீண்டும் இது போல செய்தால் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்,” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 'ப்ரோ' படத்திற்கான பணத்தை சட்ட விரோதமான அதன் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத் பெற்றுள்ளதாக அமைச்சர் ராம்பாபு குற்றம் சாட்டியுள்ளாராம். இது குறித்து அமலாக்கத் துறையிடம் புகார் தெரிவிக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.