அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தமிழ் சினிமாவில் அடுத்த சில மாதங்களுக்கு சில முக்கியமான படங்கள் வெளியாக உள்ளன. அதை அடுத்த வாரம் வெளியாக உள்ள 'ஜெயிலர்' படம் ஆரம்பித்து வைக்க உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு 'ஜெயிலர் ஷோகேஸ்' என அதன் டிரைலர் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பாடல்கள் வெளியான போதும், இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் 'கழுகு, காக்கா' கதை சொல்லி பேசிய போதும் சர்ச்சை எழுந்தது. 'சூப்பர் ஸ்டார்' பட்டத்திற்கு ஆசைப்படுபவர்களைப் பற்றி அவர் அப்படி பேசியிருந்தார். அது கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று மாலை வெளியாக உள்ள டிரைலரில் ரஜினிக்கே உரிய 'பன்ச்' வசனங்களுடன் டிரைலர் இருக்குமா என அவரது ரசிகர்களும், திரையுலகினரும் காத்திருக்கின்றனர். அது மட்டுமல்ல ரஜினிகாந்த் நடித்து இதற்கு முன்பு வெளியான 'அண்ணாத்த, தர்பார்,' படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் 'ஜெயிலர்' மீதான எதிபார்ப்பு அதிகமாகவே உள்ளது.
விஜய், அஜித் படங்களின் டிரைலர்கள் யு டியூபில் எப்போதுமே போட்டி போட்டுக் கொண்டு சாதனை படைக்கும். அந்த சாதனைகளின் உச்சத்தில் விஜய், அஜித் ஆகியோர்தான் இருக்கிறார்கள். இந்த முறை அவற்றை உடைத்து 'ஜெயிலர்' சாதனை படைக்குமா ?.