காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
1980களில் கன்னட சினிமாவில் பிசியாக இருந்தவர் காயத்ரி. அதற்கு முன்பு இந்தி படங்களில் நடித்து வந்த காயத்ரி 'ஆட்டோ ராஜா' என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். இதில் அவர் சங்கர்நாத் ஜோடியாக நடித்தார். படம் சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு இந்தி படங்கள் பக்கம் போகாமல் கன்னடத்திலேயே நடித்து வந்தார்.
1982ம் ஆண்டு 'ஆட்டோ ராஜா' படம் தமிழில் ரீமேக் ஆனது. இதில் அவர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தை கே.விஜயன் இயக்கினார். ஜெய்சங்கர், வனிதா, சித்தாரா, சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தனர். இளையராஜா ஒரே ஒரு பாடலுக்கு இசை அமைத்திருந்தார். ஒரு ஆட்டோ டிரைவருக்கும், ஒரு பணக்கார பெண்ணுக்குமான காதல் கதை.
காயத்ரியின் முதிர்ச்சியான முக அமைப்பும், கனத்த உடம்பும் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. விஜயகாந்துக்கு அக்கா போன்று இருப்பதாக விமர்சனம் செய்தார்கள். படமும் வெற்றி பெறவில்லை. அதனால் மீண்டும் கன்னட படத்திலேய நடிக்க தொடங்கினார். பல வருடங்களுக்கு பிறகு 'சிகப்பு மலர்கள்' என்ற படத்தில் சுரேஷ் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை.