ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் |
தோனி எண்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ள படம் எல்ஜிஎம். தமிழ்மணி என்பவர் இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஜூலை 28ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் சென்னை மற்றும் ஐதராபாத்தில் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளும் நடந்தது. இந்த நிலையில் தற்போது எல்ஜிஎம் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், இந்த படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும், 153 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 33 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.