டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தனக்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டு நேற்று முன்தினம் தான் ஓய்வெடுப்பதற்காக வெளிநாடு சென்றார் விஜய். இந்த நிலையில் வெளிநாட்டில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த அஜித்குமார் தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களுடன் அஜித்குமார் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.
துணிவு படத்திற்கு பின் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கயிருப்பதால் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பி இருக்கிறார் அஜித். அதனால் இன்னும் சில தினங்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.