லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கடந்த 2010ம் ஆண்டில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடித்து வெளிவந்த காமெடி படம் பாஸ் (எ) பாஸ்கரன். இந்த படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் அதிகம் பகிரப்படும் காட்சிகளாகவும், மீம்ஸ்களாகவும் உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சந்தானம் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டாம் பாகத்திற்கு பாஸ் 2 என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆர்யா, சந்தானம் இணைந்து நடிக்கின்றனர். இந்த பாகத்தையும் எம்.ராஜேஷ் இயக்குகிறார் என கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.