மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது குஷி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து தனது 12வது, 13வது படங்களிலும் நடித்து வருகிறார். இதையடுத்து ஒரு புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் நானியை வைத்து ஜென்டில்மேன், வி போன்ற படங்களை இயக்கிய மோகன் கிருஷ்ணா இந்திராகாந்தி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜயடு என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பான் இந்திய படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.




