‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
கடந்த 2004ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். முதல் பாகம் வெளியாகி 20 ஆண்டுகளை நெருங்கி உள்ளது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் செல்வராகவன். முதல் பாகத்தில் நாயகனாக நடித்த ரவி கிருஷ்ணாவே மீண்டும் நாயகனாக நடிக்கும் நிலையில், யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். இந்நிலையில் முதல் பாகத்தில் சோனியா அகர்வால் நாயகியாக நடித்த நிலையில், தற்போது இரண்டாம் பக்கத்தில் விருமன், மாவீரன் படங்களில் நடித்த அதிதி ஷங்கரை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.