பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
சந்திரலேகா தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பண்டேகர். சக சின்னத்திரை நடிகரான மால்மருகன் என்பவரை காதலித்து வந்த ஸ்வேதா, சீரியல் முடிந்த கையோடு திருமணம் செய்து இல்லற வாழ்விலும் புகுந்தார். சில தினங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியையும் சோஷியல் மீடியாவின் மூலம் ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார். தற்போது ஸ்வேதாவுக்கு 8 மாதம் ஆகிறது. இந்நிலையில், மற்ற நடிகைகளை போலவே ஸ்வேதாவும் 'மெட்டெர்னட்டி போட்டோஷூட்' நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு பலர் பாசிட்டிவான கமெண்டுகளுடன் வாழ்த்துகளை பதிவிட்டாலும், சிலர் வழக்கம் போல் ஸ்வேதாவை விமர்சித்து வருகின்றனர்.