பிரபாஸ் படத்தில் நடிக்க காரணம் இது தான் : மாளவிகா மோகனன் | நானியின் 'ஹிட்-3' படத்தின் டீசர் வெளியீடு | 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' மூன்று நாள் வசூல் எவ்வளவு? | 'கராத்தே பாபு' படம் குறித்து ரவி மோகன் வெளியிட்ட அப்டேட்! | தமிழில் சினிமாவாகும் ஹாலிவுட் வெப் தொடர் | குற்ற உணர்ச்சியில் அழ வைக்கிற மிகவும் அழகான ஒரு முயற்சி! 'டிராகன்' படத்தை பாராட்டிய வசந்த பாலன் | நிறம் மாறும் உலகில் 4 ஹீரோயின்கள் | அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்ட 'டிராகன்' இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து! | பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி ரகசிய திருமணம் | பாண்டிராஜ் இயக்கும் படத்தை சத்தமில்லாமல் நடித்து முடித்த விஜய் சேதுபதி! |
பாலிவுட் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் ஷாருக்கான். பாலிவுட் நடிகர்களிலேயே அதிக அளவிலான ரசிகர்களையும் பெற்றிருப்பது இவர்தான். சமீபத்தில் வெளியான இவரது பதான் வெற்றிப்படமாக அமைந்து, ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை மஹ்னூர் பலோச். என்பவர் சமீபத்திய ஒரு பேட்டியின்போது நடிகர் ஷாருக்கானை நடிப்புத் திறமை இல்லாதவர் என விமர்சித்துக் கூறியுள்ளார்.
இந்த பேட்டியில் அவர் கூறும்போது, “ஷாருக்கான் தனது பெர்சனாலிட்டி மற்றும் கரிஸ்மா காரணமாக மற்றவர்களை கவர்ந்து விடுகிறார். அதே சமயம் அவர் இப்போது ஹேண்ட்சம் என்று சொல்லப்படும் அழகு என்று வரையறைக்குள் பொருந்தாதவர். இவர் தன்னை தானாகவே மார்க்கெட்டிங் செய்து கொள்ளும் அளவுக்கு திறமையானவர். இவரை விட அழகும் திறமையும் வாய்ந்த பலர் சினிமாவால் பெரிய அளவில் கண்டு கொள்ளப்படாமலேயே இருக்கின்றனர்” என்று கூறியுள்ளார். இவர் இப்படி கூறியதை தொடர்ந்து ஷாருக்கானின் ரசிகர்கள் இவருக்கு தங்களது கண்டனங்களை சோசியல் மீடியா மூலமாக தெரிவித்து வருகின்றனர்.