ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது |
தமிழ் சினிமா உலகில் அடுத்த அரையாண்டில் பல பெரிய படங்கள் வர உள்ளன. அவற்றிற்கான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வந்து ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன. விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் முதல் சிங்கிள் 'நா ரெடி' பத்து நாட்களுக்கு முன்பு வெளியாகி ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியும், மற்றொரு பக்கம் வரவேற்பையும் பெற்று யு டியூபில் 43 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' படத்தின் டிரைலர் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. இந்த டிரைலரிலும் சாதி அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளதால், 'மாமன்னன்' படத்திற்குப் பிறகு இந்தப் படமும் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
'லியோ, மாமன்னன், மாவீரன்' என சில படங்கள் தமிழ் சினிமா உலகிலும், அரசியல் தளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' படத்திற்கு எந்த அப்டேட்டும் வரவில்லையே என அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் கேட்டனர். அதைத் தீர்க்கும் வகையில் 'ஜெயிலர்' படத்தின் முதல் சிங்கிள் பற்றிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களின் அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டிருக்க 'அப்டேட், அப்டேட், வலிமை அப்டேட்' என அதை மிகவும் பிரபலமாக்கிய அஜித் ரசிகர்கள் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்புப் பற்றிய அப்டேட் எப்போது வரும் என காத்திருக்கின்றனர்.