மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
'பாகுபலி' படங்கள் மூலம் பான் இந்தியா நடிகர் என மிகவும் பிரபலமானார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். ஆனால், 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவர் மிகவும் எதிர்பார்த்து நடித்த படங்கள் அவருக்கு அதைப் போன்ற ஒரு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. 'சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ்' ஆகிய படங்கள் வெளியான ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக ஏமாற்றத்தையும், நஷ்டத்தையுமே கொடுத்துள்ளன.
இருந்தாலும் பிரபாஸ் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 'கேஜிஎப்' இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'சலார்' படத்தின் டீசர் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'பாகுபலி 2'க்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றினாலும் 'சலார்' படத்தின் இயக்குனர் 'கேஜிஎப்' இயக்குனர் என்பதால் ஏமாற்றம் தர மாட்டார்கள் என ரசிகர்கள் நம்புகிறார்கள். 'ஆதி புருஷ்' படம் வெளிவந்த பிறகு சில பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அதைப் பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் பிரபாஸ் 'சலார்' பக்கம் சாய்ந்து அதை சாதனைப் படமாக மாற்ற விரும்புகிறார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.