''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இயக்குனர் வெற்றி மாறனின் தாயார் மேகலா சித்ரவேல் ஒரு எழுத்தாளர் என்பது பலரும் அறியாத ஒன்று. 'கமலி அண்ணி', 'ரதிதேவி வந்தாள்', 'வசந்தமே வருக', 'மழை மேக மயில்கள்' உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். தற்போது எம்ஜிஆர் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கினார்.
இதுகுறித்து மேகலா சித்ரவேல் கூறியதாவது: என்னைப் படிக்க வைத்ததே வெற்றிமாறன்தான். எனக்கு சிறுவயதிலிருந்தே நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். பெண்கள் நிறைய முன்னேற வேண்டும். வயதெல்லாம் ஒரு காரணமாக காட்ட வேண்டியதில்லை. வயதைக் காரணம் காட்டி அவர்களை அடக்கக் கூடாது.
எனது கைடு பேராசியர் பிரபாகர். ஒரு ஆய்வு கட்டுரை எழுதுங்கள் அதற்கு நிறைய படியுங்கள் என்றார். நான் எம்ஜிஆர் குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். அவர் சொன்னதை என் பையனிடம் சொன்னேன். அவன் உடனே 'கண்டிப்பாக நீங்க இத பண்ணுங்கம்மா' என்றான். அவன்தான் 4 வருட கட்டணத்தை கட்டி என்னை படிக்க வைத்தான். என்றார்.