பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உட்பட பல நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பொல்லாதவன் பட வில்லன் டேனியல் பாலாஜி நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இவர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டது. ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பில் இடையில் தாமதம் ஏற்பட்ட போது கால்ஷீட் பிரச்சினையால் டேனியல் பாலாஜி இப்படத்தை விட்டு வெளியேறியுள்ளார். அவரது கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகர் நடித்து வருவதாக கூறுகின்றனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மறுநாள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.