ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

90களில் ஆக்சன் ஹீரோவாக, முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். கால மாற்றத்தில் கதாநாயகன் அந்தஸ்திலிருந்து மாறினாலும் தற்போது நடித்து வரும் படங்களில் நாயகனுக்கு இணையான அல்லது முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக, வாரிசு படத்தில் விஜய்யின் தந்தையாக, கஸ்டடி படத்தில் நெகட்டிவ் போலீஸ் அதிகாரியாக, சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற போர் தொழில் திரைப்படத்தில் இறுக்கமான போலீஸ் அதிகாரியாக என விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் சரத்குமார்.
குறிப்பாக இப்போது அவர் நடித்து வரும் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக தான் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் ஸ்மைல் மேன் என்கிற படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக தான் நடித்துள்ளார். அதேசமயம் அந்த படத்தில் கஜினி பட சூர்யா போல சட்டென்று ஒரு ஞாபக மறதிக்கு ஆளாகும் மனிதராக நடித்துள்ளாராம் சரத்குமார். குற்றவாளியை நெருங்கி பிடித்து விடுவாரோ என்று நினைக்கின்ற நேரத்தில், தான் எதற்காக அங்கே வந்தோம் என்பதே மறந்துபோய் வில்லனிடமே சென்று மன்னிப்பு கேட்டு கண்டு கொள்ளாமல் செல்வது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சரத்குமார் கூறியுள்ளார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்கள் தான் தொடர்ந்து தன்னை தேடி வருகின்றன என்றாலும் அவை கொஞ்சம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்தால் ஒப்புக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார் சரத்குமார்.




