'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நீர் பறவை, தர்ம துரை போன்ற எதார்த்தமான திரைப்படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. அவர் ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்கிய இடி முழக்கம் படம் விரைவில் வெளியாகிறது.
இந்த நிலையில் சீனு ராமசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி, "தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள், சினிமா, தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது இடங்களில் ஒலிப்பெருக்கிகளில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை மற்றும் தடை விதித்தல் செய்திட வேண்டும்" என கோரியுள்ளார்.