படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
சென்னை : கடன் விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக, லைகா நிறுவனம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம், கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, படங்களின் உரிமையை தருவதாக, விஷால் நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, தங்களுக்கு தர வேண்டிய, 21.29 கோடி ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட, விஷால் நிறுவனத்துக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையில், படம் வெளியாகி விட்டதால், கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் செலுத்தக் கோரி, மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'விஷால் நிறுவனம் தரப்பில், 15 கோடி ரூபாய் மட்டுமே கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் கடன் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பெயரில், தேசிய வங்கியில், 15 கோடி ரூபாய்க்கு பிக்சட் டிபாசிட்டை, விஷால் நிறுவனம் செலுத்த வேண்டும்' என, இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை, முதல் பெஞ்ச் உறுதி செய்தது. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற தவறினால், விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை எந்த வழியிலும் வெளியிடவும் தடை விதித்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறியதாக, விஷாலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை, லைகா நிறுவனம் தாக்கல் செய்தது. மனு, நீதிபதி சவுந்தர் முன், விசாரணைக்கு வந்தது. தங்கள் நிறுவனம் சார்பில், தற்போது எந்த படங்களையும் தயாரிக்கவில்லை என, விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, லைகா நிறுவனத்தின் மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார். பிரதான வழக்கில், வரும், 26ல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதாக, நீதிபதி தெரிவித்தார்.