பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் | இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா |
ராதாமோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி மற்றும் பலர் நடித்துள்ள 'பொம்மை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 'மான்ஸ்டர்' படத்திற்குப் பிறகு மீண்டும் பிரியா பவானியுடன் ஜோடி சேர்ந்து நடித்த காரணம் என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரியா பவானியை சிம்ரனுடன் ஒப்பிட்டுப் பேசினார் எஸ்ஜே சூர்யா.
“எங்க அக்கா பொண்ணுக்கு கிட்டத்தட்ட பிரியா பவானி சங்கரோட சாயல் இருக்கும். சிம்ரன் மேடம் பார்த்தீங்கன்னா, அந்த பேஸ் கட் இருக்கும், த்ரிஷாவுக்கு இருக்கும். முகத்துல ஒரு கட் இருக்கும், அந்த கட் இருந்ததுன்னா ஒரு முகத்துக்கும் இன்னொரு முகத்துக்கும் பொருத்தமா இருக்கும். ஷாரூக்கானுக்கும் கஜோலுக்கும் அப்படி இருக்கும். அதுக்கு என்ன காரணம்னு சொல்ல முடியாது. எனக்கும் பிரியாவுக்கும் ஒரு மேத்தமேடிக்கல் பியூச்சர்ஸ் செட் ஆகுது. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.
“தொட்டால் பூ மலரும்” பாட்டுல நானும் சிம்ரனும் இருந்த ஸ்டில்லையும், 'பொம்மை' படத்துல நானும், பிரியாவும் இருந்த ஸ்டில்லையும் இதுக்கு முன்னாடி ஒண்ணா போட்டிருந்தேன். சிம்ரன் மாதிரியே பிரியா இருந்தாங்க. 'மான்ஸ்டர்' படத்தோட வெற்றி, நல்லாவும் நடிச்சாங்க. அதான் இந்தப் படத்துல மீண்டும் ஜோடியா நடிச்சிருக்காங்க,” என்றார் எஸ்ஜே சூர்யா.
சிம்ரன் போல பிரியா பவானி இருக்கிறார் என்ற எஸ்ஜே சூர்யாவின் பேச்சுக்கு நிறையவே வெட்கப்பட்டு பக்கத்தில் இருந்த இயக்குனர் ராதாமோகனிடம் என்னவோ கிசுகிசுத்தார் பிரியா.