நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி பிரியதர்ஷன் | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு : அக்., 30ல் தீர்ப்பு | பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் | 'அங்காடி தெரு' மகேஷ் நடிக்கும் 'தடை அதை உடை' | ரஜினிகாந்த் மனசு மற்ற ஹீரோக்களுக்கு இல்லையே! | ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க தடை நீடிப்பு | நடிகர் சங்க புதுக்கட்டடம்: விஜயகாந்த் பெயர் வைக்க சிக்கலா? |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுதப்படியாக தற்போது தனது மகள் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இதில் சிறப்பு வேடத்தில் அவர் நடிக்கிறார். இதை தொடர்ந்து இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ஹம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு கழித்து ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனராம். மேலும் இது நடக்கும் பட்சத்தில் இதுதான் அமிதாப்பச்சன்க்கு முதல் நேரடி தமிழ்ப்படமாகவும் அமையும். அதுமட்டுமல்ல இது தான் உண்மையான மெகா கூட்டணி படமாகவும் அமையும். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
முன்னதாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உயர்ந்த மனிதன் படத்தில் நடித்து வந்தார் அமிதாப். ஆனால் அந்தப்படம் பாதியில் நின்றது குறிப்பிடத்தக்கது.