என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
நடிகை அனுசுயா பரத்வாஜ் பல தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா, தற்போது வெளியாகவுள்ள விமானம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது; '' விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் அவர் மோசமான வசனம் பேசியிருந்தார். அவரை தொடர்ந்து அந்த வசனத்தை அவரது ரசிகர்களும் பேச ஆரம்பித்தனர். அதனை நான் கண்டித்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இதுபோன்ற வசனங்களும் காரணமாகிறது என்று தெரிவித்தேன். இதனால் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் என்னை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால், ரசிகர்களை விஜய்தேவரகொண்டா கட்டுப்படுத்தவில்லை .மேலும், அவரது குழுவில் இருந்த முக்கிய நபர் ஒருவரும் என்னை அவதூறு செய்து கருத்து பதிவிட்டதாக அறிந்தேன். இதெல்லாம் விஜய்தேவரகொண்டாவுக்கு தெரியாமல் செய்து இருக்க மாட்டார். அவரது தூண்டுதலின் பெயரில் தான் இதெல்லாம் நடக்கிறது என்பது தெரிந்தது. விஜய்தேவரகொண்டா பலருக்கு பணம் கொடுத்து எனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்'' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.