'விசில் போடு' சாதனையை முறியடிக்குமா 'கிஸ்ஸிக்'? | தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவு…அடுத்த ஆண்டாவது நடக்குமா? | 4வது திருமணத்திற்கு பின் கொச்சியை விட்டு வைக்கம் இடம் பெயர்ந்த நடிகர் பாலா | எம்புரான் செட்டுக்கு விசிட் அடித்த ராம்கோபால் வர்மா | நவம்பர் 29ல் 9 படங்கள் ரிலீஸ் | கோவாவில் தெருவோர கடைக்காரரிடம் சண்டை போட்ட ‛ஜெயிலர்' வில்லன் | பிளாஷ்பேக்: நடிப்பில் சாதித்து, தயாரிப்பு, இயக்கத்தில் சரிவை சந்தித்த 'நடிகையர் திலகம்' சாவித்திரி | இந்த விஷயம் இருந்தால் மட்டும் கதை சொல்லுங்க : மிஸ் யூ இயக்குனரிடம் ஜிப்ரான் போட்ட கண்டிஷன் | நடிகர் தர்ஷனுக்கு ஆபரேஷன் செய்வதில் தாமதம் : ஜாமீனை நீட்டிக்கும் முயற்சியா? | ரஜினி இதையெல்லாம் விட்டுடலாமே : ஜானகி அம்மாவிடம் வருத்தப்பட்ட எம்ஜிஆர் |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுதப்படியாக தற்போது தனது மகள் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இதில் சிறப்பு வேடத்தில் அவர் நடிக்கிறார். இதை தொடர்ந்து இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ஹம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு கழித்து ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனராம். மேலும் இது நடக்கும் பட்சத்தில் இதுதான் அமிதாப்பச்சன்க்கு முதல் நேரடி தமிழ்ப்படமாகவும் அமையும். அதுமட்டுமல்ல இது தான் உண்மையான மெகா கூட்டணி படமாகவும் அமையும். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
முன்னதாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உயர்ந்த மனிதன் படத்தில் நடித்து வந்தார் அமிதாப். ஆனால் அந்தப்படம் பாதியில் நின்றது குறிப்பிடத்தக்கது.