சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் வருண் தேஜ். அவரும் தெலுங்கில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கும், நடிகை லாவண்யா திரிபாதிக்கும் இடையில் காதல் என கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. இருவரது வீட்டாரும் திருமணம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி முடித்ததாகவும் சொன்னார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு தனது சமூக வலைத்தளத்தில் லாவண்யாவுடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து 'எனது காதலைக் கண்டுபிடித்தேன்' என வருண் தேஜ் பதிவிட்டுள்ளார். நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள வருண் வீட்டில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதற்குப் பிறகே இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் வருண்.
அப்பதிவை மறுபதிவு செய்து, “2016 முதல் என்றென்றைக்கும், எனக்கானவரைக் கண்டுபிடித்தேன்,” என லாவண்யா குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய திருமண நிச்சய நிகழ்வில் வருணின் பெரியப்பாவும், நடிகருமான சிரஞ்சீவியின் குடும்பத்தினரும், சித்தப்பாவும் நடிகருமான பவன் கல்யாண், சகோதரர் ராம் சரண் உள்ளிட்டோரும், அல்லு அர்ஜுன் குடும்பத்தினரும், லாவண்யா திரிபாதி குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.