குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங். தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2, அயலான் படங்களில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் அட்டாக், ரன்வே 34, கட்புட்டில், டாக்டர்ஜி, தேங்க் காட், சத்ரவாலி படங்களில் நடித்தார். தற்போது 'ஐ லவ் யூ' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நிகில் மகாஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் பவில் குலாட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷய் ஓபராய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். காதல் கலந்த திரில்லர் படமாக தயாராகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வருகிற 16ம் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ சினிமா ஓடிடி தளம் வெளியிடுகிறது.