சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் டைரி. தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் இன்னாசி பாண்டியன் லெமன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர் கதிரேசனின் 5 ஸ்டார் கிரியேஷனின் 12வது படத்தையும் இன்னாசி பாண்டியன் இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளனர். இதன் மூலமாக டைரி கூட்டணி மீண்டும் இணைகிறது. பெரிய பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.