'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் |
2023ம் ஆண்டின் ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. கடந்த ஐந்து மாதங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது. இத்தனை படங்களில் 'வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன் 2' ஆகிய படங்கள் மட்டுமே 200 கோடி வசூலைக் கடந்துள்ளன. இவற்றில் 'வாரிசு, பொன்னியின் செல்வன் 2' ஆகிய படங்கள் 300 கோடி வசூலைக் கடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும் தமிழக வசூலைப் பொறுத்தவரையில் 'வாரிசு' படத்தின் வசூலை 'பொன்னியின் செல்வன் 2' வசூல் கடக்கவில்லை என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். அதே சமயம் 'வாரிசு' வசூல் உண்மையான வசூலா என எதிர்தரப்பு ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 'வாரிசு' படத்தின் வசூல் 140 கோடியாகவும், 'பொன்னியின் செல்வன் 2' வசூல் 130 கோடியாகவும் இருந்தது என விஜய் ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். விஜய்க்கு நேரடிப் போட்டியான அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' படம் 110 கோடி வசூலித்துள்ளதாம். இந்த 'வாரிசு' வசூலையும் விஜய் நடித்து அக்டோபரில் வர உள்ள 'லியோ' படம்தான் முறியடிக்கும் என அவர்கள் இப்போதே ஜோசியம் சொல்கிறார்கள்.