ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு |
நடிகர் மாதவன் தற்போது தயாரிப்பாளர் சசிகாந்த் முதன்முறையாக இயக்கும் ‛தி டெஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் நயன்தாரா, சித்தார்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகிறது. இதையடுத்துமித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் மாதவன். இந்த இரு படங்களுக்கு பிறகு மற்றொரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது . அந்த தகவலின் படி, டிரைட்டென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறாராம். விரைவில் இந்த படத்தை குறித்தும் இயக்குனர் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். இப்போது கங்கனா, தமிழில் சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவனும், கங்கனாவும் ஏற்கனவே ஹிந்தி படங்களான தனு வெட்ஸ் மானு, தனு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இப்போது 8 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.