செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கடந்த 2021ம் ஆண்டில் தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவந்த திரைப்படம் வினோதய சித்தம். தம்பி ராமையா உடன் இணைந்து சமுத்திரகனி நடித்திருந்தார். தற்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. ஜூலை 28 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர்கள் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கித்திகா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெறும் ஒரு சிறப்பு பாடலுக்காக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்கிறார்கள்.