காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிறப்புத் தோற்றத்தில் சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டு இதே தினத்தில் வெளிவந்த படம் 'விக்ரம்'.
தமிழகத்தில் அதிக லாபத்தைக் கொடுத்த படங்களில் முதலிடம் என்ற பெருமையை இப்படம் பெற்றது. இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் கமல்ஹாசன் இணைகிறார் என்ற செய்தி முதன் முதலில் வெளியான போதே பலரும் ஆச்சரியப்பட்டன. படத்தின் அறிவிப்பை ஒரு வீடியோ முன்டோட்டத்துடன் வெளியிட்டு வியக்க வைத்தனர்.
கமல் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி என திறமையான நடிகர்கள் இணைகின்றனர் என்ற அறிவிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த ஆச்சரியம் படம் வெளியான போது இன்னும் அதிகமானது. ஒரு பர்பெக்டான ஆக்ஷன் திரில்லர் படமாக வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது.
ஒரு திரைக்கதையை எந்தவித குழப்பமும் இல்லாமல் சொல்ல வேண்டும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். பிளாஷ்பேக் காட்சிகள் இருந்தாலும், நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஒன்றுக்கொன்று அருமையான தொடர்புடன் ஒரு தெளிவான திரைக்கதையாக அமைந்ததும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
'விக்ரம்' படத்தின் வெற்றிக்கும், வரவேற்புக்கும் பிறகு லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் ஜோஸ், சந்தான பாரதி, இளங்கோ குமரவேல், ஹரிஷ் பெரடி, அருள்தாஸ், ஜாபர் சித்திக், காயத்ரி, வசந்தி என படத்தில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் அற்புதமாய் நடித்திருந்தார்கள்.
அனிருத் பின்னணி இசை, கிரிஷ் கங்காரதன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு, அன்பறிவு சண்டைக் காட்சி அமைப்பு என படத்தின் மற்ற தொழில்நுட்பமும் படத்தை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றன.
'விக்ரம்' படத்திற்குக் கிடைத்த வசூலை வேண்டுமானால் எதிர்காலத்தில் சில படங்கள் முறியடிக்கலாம். ஆனால், அதற்குக் கிடைத்த பெருமையையும், புகழையும் முறியடிக்க வாய்ப்பில்லை.