சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

இசையமைப்பாளர் இளையராஜா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்டுடியோவிற்கு முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் திரைப்பட முன்னணியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா தலைமையில் சங்க நிர்வாகிகள் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் அப்போது இளையராஜா "நான் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியின் படி இசைக்கலைஞர் சங்கத்தை புதுப்பித்து தருகிறேன் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்" என்று கூறினார்.
சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இதனை தெரிவித்துள்ளனர். தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் 1235 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் இசை அமைப்பாளர்கள் பாடகர், பாடகிகள் இசை கலைஞர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். இந்த சங்கத்திற்கு சென்னை வடபழனியில் சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.