2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தெலுங்கு நடிகர் நிகில் நடிக்கும் 20வது படத்திற்கு 'சுயம்பு' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பரத் கிருஷ்ணாமாச்சாரி இயக்குகிறார். பிக்சல் ஸ்டுடியோ சார்பில் கீழ்புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ரவி பஸ்ருர் இசையமைக்கிறார். நிகிலின் பிறந்த நாளையொட்டி நேற்று படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 'சுயம்பு' என்றால் 'தானாக பிறந்ததுஅல்லது தன் சொந்த விருப்பத்தால் உருவாக்கப்பட்டது என அர்த்தம். இது ஒரு மில்லினியத்திற்கு முந்தைய கதை. இது ஒரு தனி மனிதனின் காவியமாக, ஒரு பேரரசின் பொற்காலத் தொடக்கமாக உருவாகிறது. நிகில் 'தி லெஜண்டரி வாரியர்' என்று இதில் அறிமுகப்படுத்தப்படுகிறார். புகழ்பெற்ற போர் வீரரின் காவிய படைப்பு மகத்தானதாக வெளிவர இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. நிகிலின் சினிமா பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் 'சுயம்பு'. இது சிறந்த தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.